புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி 29-ம் தேதி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி 29-ம் தேதி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி 29-ம் தேதி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் செப்டம்பர் 29-ம் தேதி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு,சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் விஜய் சமீபத்தில் சட்டசபையில் வெளியிட்டார். இதற்கான அரசாணையும் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, திட்டம் அமையவுள்ள பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடலோரப் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுவதால், தங்களது பாரம்பரிய மீன்பிடித் தொழிலும் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி செப்டம்பர் 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர் மற்றும் மயிலை பகுதியைச் சேர்ந்த அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை அறிவித்துள்ளது. மேலும், புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள இடத்தை மீனவர்களின் பாரம்பரிய குடியிருப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் மீனவ கிராம பஞ்சாயத்து சபை வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்காததால், தொடர் போராட்டங்களை நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.