வட மாநிலங்களில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பீகாரிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேபாள எல்லையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டித் தீர்த்து வருகிறது.இதன் காரணமாக கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கையின் கிளை ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் பீகாரில் 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் சுமார் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.