பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விவகாரம்: விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை அனுமதி
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

12 Sep 2026 www.thinathulir.com

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விவகாரம்: விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை அனுமதி

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விவகாரம்: விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை அனுமதி

விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகளுக்காக சிலைகள் தயாரித்து விற்பனை செய்து வரும் ராஜஸ்தானைச் சேர்ந்த வேலராம், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், உரிய அனுமதியின்றி தொழில் நடத்துவதாகக் கூறி மதுரை மாநகராட்சி நிர்வாகம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியதாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக விளக்கம் அளிக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அதற்குள் அதிகாரிகள் தனது சிலை தயாரிப்பு வளாகத்தை பூட்டி சீல் வைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், சிலைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் தெர்மாகோல் தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி சிலைகள் தயாரிக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், விநாயகர் சிலைகளை தடையின்றி விற்பனை செய்யவும் அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் நிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளையின் இந்த இடைக்கால உத்தரவு சிலை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.