பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை வீடியோ வெளியீடு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

08 Sep 2026 www.thinathulir.com

பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை வீடியோ வெளியீடு

பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை வீடியோ வெளியீடு

தென்னிந்திய திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட், தனது 29-வது திரைப்படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். இதில் ஜெய், பிரியங்கா மோகன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக், அருள் தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெறுகின்றனர். ஆக்ஷன், திரில்லர், நகைச்சுவை உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய விறுவிறுப்பான திரைப்படமாக இது உருவாகிறது. ‘சக்ரா’ படத்தை இயக்கிய எம்.எஸ். ஆனந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கப் பொறுப்பை ஏற்றுள்ளார். படத்தை கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் கூறுகையில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பணியாற்றுவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு ஈர்க்கும் ஆக்ஷன் திரைப்படமாக இப்படம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஊட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக அர்ச்சனா கல்பாத்தியும், அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியூசராக ஐஸ்வர்யா கல்பாத்தியும், நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கமும் பணியாற்றுகின்றனர். ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். கிரைம் திரில்லர் பாணியிலும் உருவாகும் இப்படத்தில், பிரியங்காமோகன் பார்வையற்ற பெண் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, படத்தின் பூஜை நிகழ்வின் சிறப்பு தருணங்களை தயாரிப்பு நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.