பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா காலமானார்... 57 வயதில் நேர்ந்த சோகம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
31 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 31 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா காலமானார்... 57 வயதில் நேர்ந்த சோகம்

பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா காலமானார்... 57 வயதில் நேர்ந்த சோகம்

இந்தி திரையுலகில் பல ஆண்டுகளாகத் தனது தனித்துவமான படைப்புகளால் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற இயக்குநர் சஞ்சய் குப்தா, தனது 57-வது வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு பாலிவுட் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சஞ்சய் குப்தா, 1994-ம் ஆண்டு வெளியான ‘ஆதிஷ்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி இந்தி சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார். அமிதாப் பச்சன், சஞ்சய் தத், சுனில் ஷெட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த ‘காண்டே’ திரைப்படம் இவருக்கு குறிப்பிடத்தக்க புகழைப் பெற்றுத் தந்தது. இதையடுத்து ‘முசாபிர்’, ‘ஜிந்தா’, ‘ஷூட்அவுட் அட் லோகண்ட்வாலா’, ‘ஷூட்அவுட் அட் வாடாலா’ போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். ஹிருத்திக் ரோஷன் நடித்த ‘காபில்’, ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ஜஸ்பா’, ‘மும்பை சாகா’ உள்ளிட்ட திரைப்படங்களும் இவரது இயக்கத்தில் வெளியானவை. இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பல துறைகளிலும் அவர் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 30-ம் தேதி பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் சஞ்சய் குப்தா தனது வீட்டின் சமையலறையில் எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவத்தின்போது அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களும் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தலையில் ஏற்பட்ட காயமே அவரது உயிரிழப்புக்குக் காரணமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சய் குப்தாவின் மறைவு குறித்த தகவலை இயக்குநர் அசோக் பண்டிட் சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியதுடன், தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தனது திரைப்படங்கள் மூலம் இந்தி சினிமாவில் தனி முத்திரை பதித்த இயக்குநரின் மறைவு பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.