பிரதமர் மோடியுடனான நிகழ்ச்சி: அடர் கருநீல உடையில் விஜய் – அரசியல் குறியீடா?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
12 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 12 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பிரதமர் மோடியுடனான நிகழ்ச்சி: அடர் கருநீல உடையில் விஜய் – அரசியல் குறியீடா?

பிரதமர் மோடியுடனான நிகழ்ச்சி: அடர் கருநீல உடையில் விஜய் – அரசியல் குறியீடா?

பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் பங்கேற்ற நிகழ்ச்சிகளில், வழக்கமாக கோட்-சூட் அணிந்து தோன்றும் தமிழக முதலமைச்சர் விஜய், அடர் கருநீல நிறச் சட்டை மற்றும் பேண்ட் அணிந்து வந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அவரது உடைத் தேர்வு அரசியல் ரீதியான செய்தியை வெளிப்படுத்துகிறதா என்ற விவாதமும் எழுந்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் சிலர், விஜய் தனது உடை மூலமாகவே எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாகக் கருத்து தெரிவித்தனர். அவரது ஆடைத் தேர்வு அரசியல் நிலைப்பாட்டை உணர்த்தும் அடையாளம் என்றும் அவர்கள் கூறினர். தமிழக அரசியலில் கருப்பு நிறம் சுயமரியாதை மற்றும் திராவிட இயக்கக் கொள்கைகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இதனால், பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் விஜய் அணிந்திருந்த உடை கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், விஜய்யின் உடையில் எந்த அரசியல் அடையாளமும் இல்லை என்று த.வெ.க. தலைவர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய விஜய், 'ஒன்றிய அரசு' என்ற சொல்லைப் பயன்படுத்தியதும் கவனத்தை ஈர்த்தது. மேலும், பிரதமரிடம் தனது கோரிக்கைகளைத் தெளிவாக எடுத்துரைக்கும் வகையில், அவற்றை ஆங்கிலத்தில் பட்டியலிட்டுப் பேசினார். ஆனால், விஜய் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து மோடி உரையாற்றும்போது நேரடியாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை. விழா மேடையில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கான பொத்தானை அழுத்தும் நிகழ்வின்போது, பிரதமர் மோடி விஜய்யின் கையைப் பிடித்து அவரைத் தன்னுடன் இணைத்துக் கொண்டார். இதற்கிடையே, சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலையத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் வாகன அணிவகுப்பில் பயணித்தார். அந்த அணிவகுப்பில் முதலமைச்சர் விஜய்யின் காரும் இடம்பெற்றிருந்தது. போரூரில் மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைத்தது முதல், சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற அரசு விழா வரை, பிரதமரின் பாதுகாப்பு வாகன அணிவகுப்புடன் விஜய்யின் காரும் சென்றது குறிப்பிடத்தக்கது. சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வர சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, அங்கிருந்த ராம எந்திரத்தைப் பார்வையிட்ட அவர், அதன் மீது தாமரை மலரை வைத்து வழிபட்டார். இந்த நிகழ்வின்போது ஆளுநர் ஆர்.வி. அர்லேகர், முதலமைச்சர் விஜய் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி ஆகியோர் உடனிருந்தனர்.