பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி குஜராத் மாநிலம் வாத்நகரில் தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி மற்றும் ஹீராபென் மோடி தம்பதியரின் மூன்றாவது மகனாக நரேந்திர மோடி பிறந்தார். குஜராத் மாநில முதல்-மந்திரியாக 2001-ம் ஆண்டு பொறுப்பேற்ற அவர், தொடர்ந்து நான்கு முறை அந்த பதவியில் இருந்தார். இதையடுத்து, 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து 2019 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை மோடி வகித்து வருகிறார். மேலும், தொடர்ந்து அதிக நாட்கள் இந்திய பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற சாதனையையும் நரேந்திர மோடி படைத்துள்ளார்.