பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாளையொட்டி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மோடி நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழவும், பொதுவாழ்வில் மேலும் பல சாதனைகளைப் படைத்து நாட்டுக்கு தொடர்ந்து சேவையாற்றவும் வாழ்த்துவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.