பிபா யு-15 உலகக் கோப்பை: கியூபாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
30 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 30 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பிபா யு-15 உலகக் கோப்பை: கியூபாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா!

பிபா யு-15 உலகக் கோப்பை: கியூபாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா!

பிபா யு-15 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கடைசி ஆட்டத்தில் கியூபா அணியை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி, கியூபாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்து அசத்தினர். இந்திய அணியின் சார்பில் விக்டர் லால்அவம்புயா ஆட்டத்தின் 1 மற்றும் 23-வது நிமிடங்களிலும், நிபாஸ் மீதேய் வாகெங்பாம் 6 மற்றும் 22-வது நிமிடங்களிலும் கோல் அடித்தனர். ஆர். லால்ரெம்ருவாட்பெலா 12 மற்றும் 27-வது நிமிடங்களில் கோல் பதிவு செய்தார். இதனால் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இருப்பினும், பின்னர் சுதாரித்துக் கொண்ட கியூபா வீரர்கள் தொடர்ந்து 3 கோல்களை அடித்து ஆட்டத்தில் மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தினர். ஆனாலும், இந்திய அணியின் வெற்றியை அவர்களால் தடுக்க முடியவில்லை. முடிவில் 6-4 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. 189 நாடுகள் பங்கேற்ற இந்த முதல் பிபா யு-15 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மொத்தம் 10 போட்டிகளில் விளையாடியது. இதில் லாவோஸ், கேமரூன், பஹ்ரைன், டிரினிடாட் மற்றும் டொபாகோ, கியூபா ஆகிய அணிகளை வீழ்த்தியது. அதேவேளையில் செனகல், ஹோண்டுராஸ், ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் அணிகளிடம் தோல்வியைத் தழுவியது. கிரெனடாவுக்கு எதிரான ஆட்டம் சமனில் முடிந்தது. கடைசிப் போட்டியில் கியூபாவை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்துள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்தப் புள்ளிப் பட்டியலில் இந்தியா 87-வது இடத்தைப் பிடித்துள்ளது.