பிக் பாஸ் சீசன் 10: இணையத்தில் வைரலாகும் ஆண் போட்டியாளர்களின் பட்டியல்!
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

02 Sep 2026 www.thinathulir.com

பிக் பாஸ் சீசன் 10: இணையத்தில் வைரலாகும் ஆண் போட்டியாளர்களின் பட்டியல்!

பிக் பாஸ் சீசன் 10: இணையத்தில் வைரலாகும் ஆண் போட்டியாளர்களின் பட்டியல்!

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சி தனது 10-வது சீசனை தொடங்க உள்ளது. இந்த சீசனில் பங்கேற்கப்போகும் பிரபலங்கள் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆண் போட்டியாளர்களாக களமிறங்க உள்ளதாகக் கூறப்படும் சிலரின் பெயர்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.தமிழில் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை, தமிழில் தொடர்ந்து 7 ஆண்டுகள் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 7-வது சீசனுக்குப் பிறகு அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில், 8 மற்றும் 9-வது சீசன்களை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.தற்போது ‘பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சி தனது 10-வது சீசனில் கால்பதிக்கிறது. புதிய போட்டியாளர்கள், எதிர்பாராத திருப்பங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு இடையிலான மோதல்கள் என இந்த சீசனும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் பிரம்மாண்ட தொடக்க விழா செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை, இந்த முறை ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் காணலாம்.இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள போட்டியாளர்கள் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதன்படி, சின்னத்திரை நடிகர்கள் நவீன் குமார், ஆர்யன், வினோத் பாபு, புவியரசு, குரேஷி, பார்கவ் ராம், இன்ஸ்டாகிராம் பிரபலம் ராஜ்பிரியன், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் மற்றும் திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ஆகியோரின் பெயர்கள் ஆண் போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் பரவி வருகிறது.எனினும், இந்தப் பட்டியல் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. எனவே, பிக்பாஸ் சீசன் 10 தொடங்கும் வரை இணையத்தில் வெளியாகும் இந்தப் பெயர்களை உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே பார்க்க வேண்டும்.