பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்வு: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
31 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 31 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்வு: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்வு: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். கறவை மாடுகளுக்குத் தேவையான பல்வேறு இடுபொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்தக் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தி ரூ.44 ஆக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளதால், கொள்முதல் விலை ரூ.44 ஆக அதிகரித்துள்ளது.இந்த விலை உயர்வின் மூலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 3.15 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார்.