ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வலுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு, முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவரது சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஜப்பானில் நடைபெறும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வலுதூக்குதலில் 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கஸ்தூரி ராஜாமணி, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில், வீராங்கனைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கஸ்தூரி ராஜாமணி தனது தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இந்தச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள விஜய், அவரது சாதனை தமிழ்நாட்டின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய ஊக்கத்தை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார். கஸ்தூரி ராஜாமணி தொடர்ந்து பல்வேறு வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.