பாரா ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் சிவராஜனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பாரா ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் சிவராஜனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

பாரா ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் சிவராஜனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் சிவராஜன் சோலைமலைக்கும் முதல்-அமைச்சர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், வீரர் சிவராஜனின் சாதனையைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய அணிக்கும், தமிழக வீரர் சிவராஜன் சோலைமலைக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். சிவராஜன் தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளதாகக் குறிப்பிட்ட முதல்வர் விஜய், அவரைப் பாராட்டும் விதமாக ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், சிவராஜனின் வெற்றி தமிழகத்தைச் சேர்ந்த இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும், அவர் தொடர்ந்து பல வெற்றிகளைக் குவித்து தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் முதல்வர் வாழ்த்தியுள்ளார்.