பாம்பு கடித்து 3 மாணவிகள் உயிரிழப்பு: பள்ளியின் உரிமம் நிரந்தரமாக ரத்து
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
11 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 11 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பாம்பு கடித்து 3 மாணவிகள் உயிரிழப்பு: பள்ளியின் உரிமம் நிரந்தரமாக ரத்து

பாம்பு கடித்து 3 மாணவிகள் உயிரிழப்பு: பள்ளியின் உரிமம் நிரந்தரமாக ரத்து

மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள ஜப்தலை கிராமத்தில் அரசு உதவி பெறும் பழங்குடியின மாணவர்களுக்கான உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில், சம்பவத்துக்கு முந்தைய இரவு விடுதி அறையில் மாணவிகள் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அறைக்குள் புகுந்த பாம்பு, அங்கு தூங்கிக் கொண்டிருந்த 6 மாணவிகளை கடித்ததாக கூறப்படுகிறது.பாம்பு கடித்ததில் 8, 12 மற்றும் 14 வயதுடைய 3 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பாம்பு கடித்த 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சம்பவம் நடந்த அரசு உதவி பெறும் பள்ளியின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், மராட்டிய மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் பழங்குடியின உறைவிடப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.