பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் விஜய்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

25 Jul 2026 www.thinathulir.com

பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் விஜய்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் விஜய்

பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவின் மூலம் ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அந்த பதிவில், "பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. ராமதாசுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் சிறந்த உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டுகள் வாழ வேண்டும் என்று உளமாற வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.