பாஜக மாநிலத் தலைவர் பதவி வழங்கினால் ஏற்றுக்கொள்வீர்களா? சரத்குமார் பதில்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பாஜக மாநிலத் தலைவர் பதவி வழங்கினால் ஏற்றுக்கொள்வீர்களா? சரத்குமார் பதில்

பாஜக மாநிலத் தலைவர் பதவி வழங்கினால் ஏற்றுக்கொள்வீர்களா? சரத்குமார் பதில்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாத நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. மத்திய அமைச்சர் பதவியை எல்.முருகன் ராஜினாமா செய்துள்ளதால், அவர் மீண்டும் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், ஏற்கெனவே மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்தவர்களுக்கு மீண்டும் அதே பதவியை வழங்கும் நடைமுறை பாஜகவில் இல்லாததால், புதிய நபர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்த நடிகர் சரத்குமாருக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. தற்போது பாஜக நிர்வாகியாகச் செயல்பட்டு வரும் அவர், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக பாஜக தலைவர் பதவி வழங்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்வீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த சரத்குமார், “அத்தகைய முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக என்னிடம் தெரிவிக்கப்பட்டால், அப்போது எனது கருத்தைத் தெரிவிப்பேன். தற்போது ஊடகங்களில் வெளியாகும் யூகங்களுக்குப் பதில் அளிக்க முடியாது. கட்சித் தலைமை முடிவெடுத்த பிறகுதான் அடுத்தகட்டமாக எனது பதில் இருக்கும்” என்று தெரிவித்தார்.