பாகிஸ்தானுக்கு எதிராக சிக்சர் மழை - யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த அபிஷேக் சர்மா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பாகிஸ்தானுக்கு எதிராக சிக்சர் மழை - யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த அபிஷேக் சர்மா

பாகிஸ்தானுக்கு எதிராக சிக்சர் மழை - யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த அபிஷேக் சர்மா

ஆசிய விளையாட்டுப் போட்டி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 7 சிக்சர்களை விளாசிய இந்திய வீரர் அபிஷேக் சர்மா, முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்தார். ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா, 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இதில் 7 சிக்சர்களும் இடம்பெற்றன. இதன் மூலம் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான டி20 போட்டிகளில், ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் யுவராஜ் சிங்குடன் அபிஷேக் சர்மாவும் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டார். கடந்த 2012-ம் ஆண்டு அகமதாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் யுவராஜ் சிங் 7 சிக்சர்களை அடித்திருந்தார். இறுதிப்போட்டியில் அபிஷேக்கின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.