‘பழைய திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றியுள்ளனர்’ - வேளாண் பட்ஜெட்டை பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Aug 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Aug 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

‘பழைய திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றியுள்ளனர்’ - வேளாண் பட்ஜெட்டை பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

‘பழைய திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றியுள்ளனர்’ - வேளாண் பட்ஜெட்டை பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

2026-27ஆம் நிதியாண்டிற்கான தமிழக வேளாண் பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இந்த நிலையில், வெளியிடப்பட்ட வேளாண் பட்ஜெட்டை தே.மு.தி.க. பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்தார்.செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு துறைகளுக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எந்த நிதி ஒதுக்கீடும் இடம்பெறவில்லை என்று கூறினார்.மேலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் தற்போது திறந்த வெளிகளில் சேமித்து வைக்கப்படுவதாகவும், அதற்கான போதிய கிடங்கு வசதிகள் இல்லாத நிலை தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், தரிசு நிலங்களை சாகுபடிக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும், புதிய திட்டங்களை அறிவிப்பதற்குப் பதிலாக ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த திட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றியுள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.