பழனியில் இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடக்கம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
04 Nov 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 04 Nov 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பழனியில் இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடக்கம்

பழனியில் இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடக்கம்

பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த ரோப் கார் சேவை, 15 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்குச் செல்ல படிப்பாதை மற்றும் யானைப்பாதை ஆகியவை முக்கிய வழிகளாக உள்ளன. இவற்றுடன், பக்தர்கள் எளிதாக மலைக்கோவிலை அடையும் வகையில் ரோப் கார் மற்றும் மின்இழுவை ரெயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ரோப் கார் மூலம் விரைவாக மலைக்கோவிலுக்குச் செல்வதுடன், வழியில் பழனி மலையின் இயற்கை அழகையும் ரசிக்க முடியும். இதனால் ஏராளமான பக்தர்கள் ரோப் கார் பயணத்தை விரும்பி தேர்வு செய்கின்றனர். இதற்கிடையே, ரோப் காரில் பயன்படுத்தப்படும் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 20-ம் தேதி முதல் இந்த சேவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, மின்மோட்டாரில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு, தேவையான பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, 15 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் பழனி ரோப் கார் சேவை மீண்டும் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேவை தொடங்கியுள்ளதால் பக்தர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.