பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் விஜய் ஆய்வு: மக்களின் குறைகளை கேட்டறிந்தார்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
07 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 07 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் விஜய் ஆய்வு: மக்களின் குறைகளை கேட்டறிந்தார்

பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் விஜய் ஆய்வு: மக்களின் குறைகளை கேட்டறிந்தார்

சென்னை மாதவரம் பால் பண்ணையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பால் கொள்முதல் மற்றும் விநியோகப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் விரிவாக கேட்டறிந்தார். தொடர்ந்து ரூ.2.23 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆவின் மைய ஆய்வகத்தின் துணைக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இதையடுத்து மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு சென்ற விஜய், அங்குள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கூடியிருந்த பொதுமக்களை நேரில் சந்தித்தார். அவர்களிடம் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்த அவர், பொதுமக்களிடமிருந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார். மேலும், இ-சேவை வாயிலாக விண்ணப்பித்திருந்த பொதுமக்களுக்கு பல்வேறு சான்றிதழ்களையும் விஜய் வழங்கினார். தொடர்ந்து பெரம்பூர் தொகுதியில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகள், பொதுமக்களின் குறைகளை கையாளும் நடைமுறைகள் மற்றும் பிரத்யேக செயலியின் செயல்பாடு ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண அதிகாரிகளுக்கு விஜய் உத்தரவிட்டார். இதனிடையே வடசென்னை பகுதிகளில் மழைநீர் தேங்கும் பிரச்சினை மற்றும் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.