பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து: முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்த விவசாயிகள்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து: முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்த விவசாயிகள்

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து: முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்த விவசாயிகள்

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக முதல்-அமைச்சர் விஜய் நேற்று சட்டசபையில் அறிவித்தார்.இதுகுறித்து அவர் பேசுகையில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்று தெரிவித்தார். மேலும், துறைசார் வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தி, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.தேர்வு செய்யப்பட்ட இடங்களின் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, புதிய விமான நிலையத்துக்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார்.தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என அறிவித்ததற்காக, பரந்தூர் விவசாயிகள் மற்றும் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, விவசாயிகள் முதல்-அமைச்சர் விஜய்க்கு பச்சை துண்டு அணிவித்து தங்களது பாராட்டை வெளிப்படுத்தினர்.