பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.50 லட்சம்! ஆதவ் அர்ஜுனா வாழ்த்து
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.50 லட்சம்! ஆதவ் அர்ஜுனா வாழ்த்து

பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.50 லட்சம்! ஆதவ் அர்ஜுனா வாழ்த்து

ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஆதவ் அர்ஜுனா, மகளிருக்கான 67 கிலோ எடைப் பிரிவு வலுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்ற கஸ்தூரி ராஜாமணிக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் திட்டத்தின் கீழ் பயிற்சி மற்றும் ஆதரவு பெற்று வரும் கஸ்தூரி ராஜாமணி, தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். மேலும், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்கும் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையைப் பெறும் கஸ்தூரி ராஜாமணி, எதிர்காலத்தில் மேலும் பல உலக சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.