பயிர்க்கடன் வசூல் தற்காலிக நிறுத்தம்... முழுமையாக கடனை செலுத்திய விவசாயிகளுக்கு புதிய கடன்!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பயிர்க்கடன் வசூல் தற்காலிக நிறுத்தம்... முழுமையாக கடனை செலுத்திய விவசாயிகளுக்கு புதிய கடன்!

பயிர்க்கடன் வசூல் தற்காலிக நிறுத்தம்... முழுமையாக கடனை செலுத்திய விவசாயிகளுக்கு புதிய கடன்!

2026-27ஆம் நிதியாண்டில் தகுதி பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்குவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 2026ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பகுதி தள்ளுபடி பெற்ற விவசாயிகளில், மீதமுள்ள கடன் தொகையை முழுமையாக செலுத்தி கடனை முடிக்காமல் தவணை தவறியவர்களிடம் நிலுவைத் தொகையை வசூலிக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பயிர்க்கடன் நிலுவை தொடர்பான அனைத்து வசூல் நடவடிக்கைகளையும் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பயிர்க்கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தி நிலுவையின்றி உள்ள விவசாயிகளுக்கு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் புதிய பயிர்க்கடன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்களை அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தெரிவித்து, அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இதுதொடர்பாக தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.