பேபி பம்ப் புகைப்படங்களை பகிர்ந்த பிரியங்கா தேஷ்பாண்டே
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
16 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 16 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பேபி பம்ப் புகைப்படங்களை பகிர்ந்த பிரியங்கா தேஷ்பாண்டே

பேபி பம்ப் புகைப்படங்களை பகிர்ந்த பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே, தனது கர்ப்ப கால புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவரது பேபி பம்ப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன. ‘சூப்பர் சிங்கர்’, ‘ஸ்டார்ட் மியூசிக்’ உள்ளிட்ட விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இதனுடன், ‘பிக்பாஸ் தமிழ்’ சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். அந்த சீசனில் அவர் இரண்டாவது இடத்தை பிடித்தார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக தனது பணியை மேற்கொண்டு வருகிறார். பிரியங்கா தேஷ்பாண்டே, டிஜே வசி சாச்சியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, தாங்கள் பெற்றோராக உள்ளதாக கடந்த ஜூன் மாதம் சமூக வலைதளம் வாயிலாக இருவரும் மகிழ்ச்சியுடன் அறிவித்தனர். இந்த செய்தியை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வரும் பிரியங்கா தேஷ்பாண்டே, தனது பேபி பம்ப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், பிரியங்காவுக்கு தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.