புதிய டிசைனில் வேட்டி, சேலை வழங்க முடிவு - அமைச்சர் விஜய் பாலாஜி விளக்கம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

31 Aug 2026 www.thinathulir.com

புதிய டிசைனில் வேட்டி, சேலை வழங்க முடிவு - அமைச்சர் விஜய் பாலாஜி விளக்கம்

Thinathulir Reporter

தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் 4 முழ வேட்டியையே விரும்புவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளதால், 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி 4 முழ வேட்டி வழங்கப்படும் என கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின், பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்படும் விலையில்லா வேட்டியின் அளவு 8 முழத்தில் இருந்து 4 முழமாக குறைக்கப்பட்டிருப்பதால் நெசவாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் எனக் கூறினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜய் பாலாஜி, தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில், பல ஆண்டுகளாக ஒரே மாதிரியான வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், புதிய வடிவமைப்பில் அவற்றை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்ததாக தெரிவித்தார்.இதையடுத்து முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்டங்களிலும் துறைச் செயலாளர்கள் மற்றும் சரக அதிகாரிகள் வாயிலாக பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்டதாக அவர் கூறினார். அதில் பெரும்பாலானவர்கள் வெளுக்கப்படாத 8 முழ வேட்டிக்கு பதிலாக வெளுக்கப்பட்ட 4 முழ வேட்டியை விரும்பியதாகவும், அதன் அடிப்படையில் 4 முழ வேட்டியும், ஜரிகை தைத்த சேலையும் வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் விளக்கினார்.மேலும், திருவள்ளூர் சரகத்தில் பெடல் தறிகள் மூலம் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கி தயாரிக்கப்பட்ட 5 லட்சத்து 25 ஆயிரம் சேலைகளையும் அரசு கொள்முதல் செய்யும் என தெரிவித்தார். நெசவாளர்களுக்கு தொடர்ச்சியான வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அரசு வழங்கிய மூலப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் வேட்டி, சேலைகளும் முழுமையாக கொள்முதல் செய்யப்படும் என்றும் அமைச்சர் விஜய் பாலாஜி கூறினார்.