போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்... ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னுக்கு ஒரு மாதம் தடை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்... ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னுக்கு ஒரு மாதம் தடை

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்... ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னுக்கு ஒரு மாதம் தடை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் லின், கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஒரு மாத காலம் கிரிக்கெட் விளையாடத் தடை செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 பிளாஸ்ட் தொடரில் நார்தாம்ப்டன்ஷயர் அணிக்காக கிறிஸ் லின் விளையாடி வந்தார். ஜூலை 18-ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் அந்த அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வழக்கமான ஊக்கமருந்து பரிசோதனைக்காக லின்னின் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவரது மாதிரியில் கொக்கைன் பயன்படுத்தியதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டன. இதன் காரணமாக ஜூலை 31-ம் தேதி அவருக்கு தற்காலிகமாக விளையாடத் தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆகஸ்ட் 20-ம் தேதி தனது தரப்பு விளக்கத்தை அளித்த லின், ஜூலை 15-ம் தேதி இரவு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை கொக்கைன் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார். அதேநேரத்தில், இந்தப் பயன்பாடு போட்டிக்கு வெளியே நிகழ்ந்தது என்றும், கிரிக்கெட் விளையாட்டுடன் அதற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார். தனது விளக்கத்துக்கு ஆதரவான ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்தார். இந்த விவகாரத்தை விசாரித்த ஒழுங்குமுறை அமைப்பு, லின்னின் விளக்கத்தையும் ஆதாரங்களையும் ஏற்றுக்கொண்டது. ஆரம்பத்தில் அவருக்கு மூன்று மாதங்கள் தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைத் திட்டத்தை அவர் முழுமையாக நிறைவு செய்ததற்கான ஆதாரங்களை வழங்கியதால், தண்டனைக் காலம் ஒரு மாதமாகக் குறைக்கப்பட்டது. அதன்படி, ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை அவருக்கான தடை அமலில் இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடை காலம் முடிந்த பின்னரும் கிறிஸ் லின் இதுவரை தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கவில்லை. இலங்கையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஒரே ஒரு ஆட்டத்தில் பங்கேற்ற அவர், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார்.