பணம் செலவழித்து போலி ஏஐ வீடியோக்கள் பரப்பப்படுகின்றன - நடிகை பிரதிபா!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
09 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 09 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பணம் செலவழித்து போலி ஏஐ வீடியோக்கள் பரப்பப்படுகின்றன - நடிகை பிரதிபா!

பணம் செலவழித்து போலி ஏஐ வீடியோக்கள் பரப்பப்படுகின்றன - நடிகை பிரதிபா!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னைப் போன்ற போலியான வீடியோக்கள் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக நடிகை பிரதிபா தெரிவித்துள்ளார். இதுபோன்ற வீடியோக்களைப் பார்த்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ‘மகாநதி’ சீரியல் மூலம் பிரபலமான பிரதிபா விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மகாநதி’ தொடரில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரதிபா. சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், தனது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலியான வீடியோக்கள் உருவாக்கப்படுவதாக பிரதிபா தெரிவித்துள்ளார். ‘இதையும் ஒரு இலவச விளம்பரமாகவே பார்க்கிறேன்’ இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதிபா, சிலர் பணம் செலவிட்டு தன்னைப் பற்றிய போலி வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சிலர் இவ்வாறு செயல்பட்டாலும், அதன் மூலம் தனக்கே விளம்பரம் கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தன்னைப் பற்றிய போலி வீடியோக்கள் கண்ணில் பட்டால் அதற்காக அச்சப்பட வேண்டாம் என்றும் பிரதிபா அறிவுறுத்தியுள்ளார். எதிர்மறையான கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், மனதிற்கு நிம்மதி தரும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தன்னைப் பற்றிய போலி வீடியோக்கள் மூலம் சிலர் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதை புரிந்துகொண்டுள்ளதாகத் தெரிவித்த பிரதிபா, அவர்களுக்கு பதிலளிப்பதைவிட அந்த முயற்சிகளைப் புறக்கணிப்பதே சிறந்த வழி என்று தெரிவித்துள்ளார்.