பணகுடியில் பரபரப்பு! வாகனங்களை அடித்து நொறுக்கிய தந்தை, மகன் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
12 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 12 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பணகுடியில் பரபரப்பு! வாகனங்களை அடித்து நொறுக்கிய தந்தை, மகன் கைது

பணகுடியில் பரபரப்பு! வாகனங்களை அடித்து நொறுக்கிய தந்தை, மகன் கைது

நெல்லை மாவட்டம் பணகுடியில், வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைச் சேதப்படுத்தியதாகத் தந்தை மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்துள்ளனர். பணகுடியில் உள்ள லுத்தரன் சர்ச் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் உள்ளிட்ட பல்வேறு பாகங்கள் உடைக்கப்பட்டு சேதமடைந்திருந்தன. இதைக் கண்ட வாகன உரிமையாளர்கள், பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் அவரது மகன் விஷ்ணு ஆகிய இருவரும் மது போதையில் வாகனங்களைச் சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணகுடியில் தந்தையும் மகனும் வாகனங்களைச் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.