பட்டா மாறுதலுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அதிகாரி கைது
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

02 Sep 2026 www.thinathulir.com

பட்டா மாறுதலுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அதிகாரி கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அதிகாரி கைது

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே, பட்டா பெயர் மாற்றத்துக்காக விவசாயியிடம் லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.மாதப்பூர் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த 78 வயதான ராமசாமி விவசாயம் செய்து வருகிறார். வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரசோழபுரம் கிராமத்தில் அவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை உட்பிரிவு செய்து, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக அவர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார்.இதுதொடர்பாக வீரசோழபுரம் கிராம நிர்வாக அதிகாரி அருண்குமார் (36) என்பவரை ராமசாமி சந்தித்து விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார். அப்போது, நிலத்தை உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய ரூ.40 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என்று அருண்குமார் கேட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து, கடந்த மாதம் 26-ந்தேதி முதல் தவணையாக ரூ.10 ஆயிரத்தை ராமசாமி வழங்கினார். மீதமுள்ள தொகையை இரண்டு தவணைகளில் தருவதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், தொடர்ந்து பணம் கொடுத்து பட்டா பெயர் மாற்றம் செய்ய ராமசாமிக்கு விருப்பம் ஏற்படவில்லை.இதனால், திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அருண்குமாரை லஞ்சம் பெறும்போது கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர்.துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி ஆகியோர் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை ராமசாமியிடம் வழங்கி, அந்த பணத்தை அருண்குமாரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.அதன்படி, நேற்று வீரசோழபுரம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்ற ராமசாமி, அங்கு பணியில் இருந்த அருண்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக சென்று, லஞ்சப் பணத்துடன் அருண்குமாரை பிடித்தனர். பணத்தையும் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். பின்னர் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.கைது செய்யப்பட்ட அருண்குமாரின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள பழையக்கோட்டை புதூர் என்பது குறிப்பிடத்தக்கது.