பட்டமளிப்பு விழா: பேரன் இன்பநிதியை கட்டியணைத்து வாழ்த்திய மு.க.ஸ்டாலின்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
14 Jul 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Jul 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பட்டமளிப்பு விழா: பேரன் இன்பநிதியை கட்டியணைத்து வாழ்த்திய மு.க.ஸ்டாலின்

பட்டமளிப்பு விழா: பேரன் இன்பநிதியை கட்டியணைத்து வாழ்த்திய மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், இங்கிலாந்தில் நடைபெற்ற தனது பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.மான்செஸ்டர் நகரில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர்கல்வியை நிறைவு செய்த இன்பநிதி, பட்டத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, மேடையிலேயே மு.க. ஸ்டாலின் அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அந்த நெகிழ்ச்சியான தருணத்தில் குடும்பத்தினரும் உடன் இருந்தனர். இன்பநிதியின் கல்விச் சாதனையை பாராட்டிய மு.க. ஸ்டாலின், குடும்பத்துடன் நினைவுப் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். பட்டமளிப்பு விழாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. குடும்ப நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் லண்டன் சென்றுள்ள மு.க. ஸ்டாலின், சில நாட்கள் அங்கு தங்கியிருந்து பின்னர் சென்னை திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.