பட்ஜெட் மீதான 2-வது நாள்; தமிழக சட்டசபை கூடியது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
10 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பட்ஜெட் மீதான 2-வது நாள்; தமிழக சட்டசபை கூடியது

பட்ஜெட் மீதான 2-வது நாள்; தமிழக சட்டசபை கூடியது

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது.கூட்டம் தொடங்கியதும் முதலில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தும் தனித்தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.அதன்படி, எந்தவொரு நிகழ்ச்சியும் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என அரசு சார்பில் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிந்து பேசினார்.