பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
22 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று (அக். 21) பட்டாசு தயாரிப்புப் பணியின்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். விபத்தில் படுகாயமடைந்த சங்கீதா (35), முதலில் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்குச் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த காயத்ரியின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சங்கீதாவுக்கு ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.