தூத்துக்குடி அருகே உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் 9 சக மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த அரசு பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவரை, அவரது சக மாணவர்கள் கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து யாரிடமும் தெரிவித்தால் மேலும் தொந்தரவு செய்வோம் எனவும் அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர், தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.இதற்கிடையே அந்த மாணவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த பள்ளி ஆசிரியர், மாணவரின் பெற்றோரை அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.இதையடுத்து மாணவரை துன்புறுத்தியதாக கூறப்படும் சக மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 8-ம் வகுப்பு மாணவரை9சகமாணவர்கள்கடந்தஆண்டுமுதல்தொடர்ந்துதுன்புறுத்திவந்ததுதெரியவந்தது.இதனைத் தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட 9 மாணவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தூத்துக்குடியில் உள்ள சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 9 பேரும் நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.