பஞ்சாப்பில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3 ஆக பதிவு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
02 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 02 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பஞ்சாப்பில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3 ஆக பதிவு

பஞ்சாப்பில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3 ஆக பதிவு

பஞ்சாப் மாநிலம் ஷஹீத் பகத் சிங் நகர் பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.பூமிக்கு அடியில் சுமார் 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதற்கட்டமாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 31.124 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 76.040 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.