ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா பசும்பொன்னில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 28-ந்தேதி யாகசாலை பூஜையுடன் ஆன்மிக நிகழ்ச்சியாகத் தொடங்கியது. தொடர்ந்து நேற்று அரசியல் விழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, இன்று அரசு விழாவாக தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதற்கிடையில், மதுரையில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜீவ், மதன்ராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பசும்பொன்னுக்குச் சென்ற அமைச்சர்கள், அங்குள்ள தேவர் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.