பக்தர்கள் கவனத்திற்கு.. பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை தற்காலிக நிறுத்தம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பக்தர்கள் கவனத்திற்கு.. பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை தற்காலிக நிறுத்தம்

பக்தர்கள் கவனத்திற்கு.. பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை தற்காலிக நிறுத்தம்

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் கம்பிவட ஊர்தியின் கியர்பாக்ஸ் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பழுதைச் சரிசெய்த பிறகு மீண்டும் சேவை தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. பழனி மலைக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்காக படிப்பாதை, யானைப் பாதை, மின்இழுவை ரயில் (வின்ச்), ரோப்கார் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மின்இழுவை ரயில் மூலம் சுமார் 7 நிமிடங்களிலும், ரோப்கார் வழியாக 3 நிமிடங்களிலும் மலைக்கோவிலைச் சென்றடையலாம். மலைப்பகுதியின் இயற்கை அழகை ரசித்தபடி பயணிக்க முடிவதால், ரோப்கார் சேவையைப் பயன்படுத்த பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ரோப்கார் சேவையில் மாதந்தோறும் ஒருமுறை வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், ஆண்டுதோறும் நடைபெறும் விரிவான பராமரிப்புக்காக 50 முதல் 60 நாட்கள் வரை சேவை நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஜூலை 20-ம் தேதி வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, 64 நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 22-ம் தேதி மீண்டும் பக்தர்களின் பயன்பாட்டுக்காக சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 20, 2026) காலை சுமார் 11 மணியளவில் ரோப்காரின் கியர்பாக்ஸ் ஷாஃப்டில் (Gear Box Shaft) பழுது ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பழுதைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவை முடிவடைந்ததும் ரோப்கார் சேவை மீண்டும் பக்தர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.