பக்கிங்ஹாம் அரண்மனை முன்பு கங்குலி, லாராவுடன் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
14 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பக்கிங்ஹாம் அரண்மனை முன்பு கங்குலி, லாராவுடன் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்!

பக்கிங்ஹாம் அரண்மனை முன்பு கங்குலி, லாராவுடன் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்!

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே, இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கிரிக்கெட் உலகின் புகழ்பெற்ற வீரர்களுடன் இணைந்து நட்புரீதியான ஆட்டத்தில் பங்கேற்றார். இந்த நிகழ்வில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான சவுரவ் கங்குலி, அஜிங்க்யா ரஹானே, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரையன் லாரா மற்றும் இங்கிலாந்து வீரர்களான ஹாரி புரூக், ஜோ ரூட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆட்டத்தின்போது பேட்டிங் செய்த இளவரசர் வில்லியம், தனது கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்தினார். அவரது பேட்டிங் ஆட்டத்தை இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டும் பாராட்டினர். கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் இளவரசர் வில்லியம் விளையாடிய இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.