பாகிஸ்தானுக்கு எதிராக சிக்சர் மழை - யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த அபிஷேக் சர்மா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பாகிஸ்தானுக்கு எதிராக சிக்சர் மழை - யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த அபிஷேக் சர்மா

பாகிஸ்தானுக்கு எதிராக சிக்சர் மழை - யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த அபிஷேக் சர்மா

ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இதில் 7 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை யுவராஜ் சிங்குடன் அபிஷேக் சர்மா பகிர்ந்து கொண்டார். கடந்த 2012-ம் ஆண்டு அகமதாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் யுவராஜ் சிங் 7 சிக்சர்களை விளாசியிருந்தார். அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. பின்னர் 212 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.