பீகாரில் தனியார் மயமாகும் 16 அரசு மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள்!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
08 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 08 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பீகாரில் தனியார் மயமாகும் 16 அரசு மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள்!

பீகாரில் தனியார் மயமாகும் 16 அரசு மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள்!

பீகார் மாநிலத்தில் செயல்பட்டு வரும் 16 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை பொது-தனியார் பங்களிப்பு (PPP) முறையில் இயக்க மாநில அரசு கொள்கை ரீதியாக முடிவு செய்துள்ளது.முதல்-அமைச்சர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்தின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 17 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், ஒரு பல் மருத்துவக் கல்லூரி உள்பட 16 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை பொது-தனியார் பங்களிப்பு முறைக்கு மாற்றும் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை வகுக்கவும், முழுமையான செயல்திட்டத்தை உருவாக்கவும் சர்வதேச ஆலோசனை நிறுவனமான பிரைஸ் வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் (PwC) நிறுவனத்தை பரிவர்த்தனை ஆலோசகராக பீகார் அரசு நியமித்துள்ளது. இதற்காக ஆரம்பகட்டமாக ரூ.8.27 கோடி நிதி ஒதுக்கவும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, ஏற்கனவே செயல்பட்டு வரும் பவபூரி, ரஹுய், மாதேபுரா மற்றும் பூர்ணியா ஆகிய 4 மருத்துவக் கல்லூரிகளும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன. மேலும் சமஸ்திபூர், சரண், போஜ்பூர், மதுபனி, வைஷாலி, பக்சர், சீவான், பெகுசராய், சீதாமர்ஹி, ஜமுய், முங்கர் மற்றும் சுபால் ஆகிய மாவட்டங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் 12 மருத்துவக் கல்லூரிகளும் பொது-தனியார் பங்களிப்பு முறையின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன.பீகார் மக்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலகத்தர மருத்துவ சேவைகளை விரைவாக வழங்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் சாம்ராட் சவுத்ரி தெரிவித்துள்ளார்.இதனிடையே, அரசு மருத்துவமனைகளை தனியார் பங்களிப்பின் கீழ் கொண்டு வரும் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த முடிவால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கிடைக்கும் இலவச மருத்துவ சேவைகளின் தரம் பாதிக்கப்படலாம் என்றும், எதிர்காலத்தில் மருத்துவக் கட்டணங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.