பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

05 Sep 2026 www.thinathulir.com

பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு

பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு

வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேபாள எல்லையையொட்டி அமைந்துள்ள பீகாரின் பல பகுதிகளில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக கங்கை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கமாக கங்கையின் கிளை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பீகாரில் 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.