பகத்சிங் பிறந்தநாள்... நயினார் நாகேந்திரன் புகழாரம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பகத்சிங் பிறந்தநாள்... நயினார் நாகேந்திரன் புகழாரம்

பகத்சிங் பிறந்தநாள்... நயினார் நாகேந்திரன் புகழாரம்

புரட்சியாளர் பகத்சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் விடுதலைக்காக இளம் வயதிலேயே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த பகத்சிங், அச்சமற்ற தேசப்பற்று மற்றும் தியாகத்தின் அடையாளமாக விளங்கியவர். அடிமைத்தனத்திற்கு எதிராக துணிச்சலுடன் குரல் கொடுத்த அவர், இளைஞர்களிடம் தேசப்பற்று, தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பொறுப்பு போன்ற உணர்வுகளை ஏற்படுத்திய முக்கியமான புரட்சியாளராக வரலாற்றில் நினைவுகூரப்படுகிறார். நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்த பகத்சிங்கின் தியாகத்தையும், தேசப்பற்று நிறைந்த வாழ்க்கையையும் அவரது பிறந்தநாளில் போற்றுவோம். அவரது வீரமும் அர்ப்பணிப்பும் எதிர்கால தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.