பா. இரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ அப்டேட்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

17 Sep 2026 www.thinathulir.com

பா. இரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ அப்டேட்

பா. இரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ அப்டேட்

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ நாளை மதியம் 12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குநர்களில் ஒருவரான பா. ரஞ்சித், ‘அட்டகத்தி’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது பா. ரஞ்சித் எழுதி இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘வேட்டுவம்’. நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ், பகத் பாசில் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. சோபிதா துலிபாலா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகும் இப்படம் அறிவியல் புனைவு அம்சங்களையும் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நடிகர் தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘வேட்டுவம்’ கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில், படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ ‘வேர்ட் ஆப் வேட்டுவம்’ (World of Vettuvam) என்ற பெயரில் நாளை மதியம் 12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.