நேரு உள்விளையாட்டரங்கத்தில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளம் திறப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
13 Aug 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Aug 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நேரு உள்விளையாட்டரங்கத்தில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளம் திறப்பு

நேரு உள்விளையாட்டரங்கத்தில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளம் திறப்பு

சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் ரூ.8 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளத்தை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (ஆகஸ்ட் 13) திறந்து வைத்தார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கம் அமைந்துள்ள ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில் இந்த ஓடுதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச தரத்துக்கு இணையான பயிற்சி வசதிகளை தமிழக விளையாட்டு வீரர்கள் பெறும் வகையில் செயற்கை இழை ஓடுதளமாக இது மேம்படுத்தப்பட்டுள்ளது.மாவட்டங்களிலும் விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ராமநாதபுரம், சேலம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.38 கோடியே 24 லட்சம் மதிப்பில் புதிய செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, நீலகிரி, ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.கடந்த 3 மாதங்களில் சென்னை, அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, விருதுநகர், விழுப்புரம், கடலூர், தருமபுரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ரூ.31 கோடி மதிப்பீட்டில் பல்வேறு விளையாட்டு வசதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.இதில் தடகள எறிதல் மையங்கள், செயற்கை இழை ஹாக்கி மைதானங்கள், பாரா விளையாட்டரங்கங்கள், முதல்-அமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை அடங்கும்.