நேபாளில் SBKF சர்வதேச போட்டி: கராத்தேவில் தங்கம் வென்ற மதுரை மாணவர் வீர பிரகாஷ் – தமிழக வீரர்கள் 19 தங்கம் குவித்து சாதனை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நேபாளில் SBKF சர்வதேச போட்டி: கராத்தேவில் தங்கம் வென்ற மதுரை மாணவர் வீர பிரகாஷ் – தமிழக வீரர்கள் 19 தங்கம் குவித்து சாதனை

நேபாளில் SBKF சர்வதேச போட்டி: கராத்தேவில் தங்கம் வென்ற மதுரை மாணவர் வீர பிரகாஷ் – தமிழக வீரர்கள் 19 தங்கம் குவித்து சாதனை

நேபாளின் போக்ராவில் நடைபெற்ற SBKF சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில், கோவை, திருப்பூர், விருதுநகர் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வெற்றி ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் இந்தியா சார்பில் பங்கேற்று சிறப்பான சாதனை படைத்தனர்.கராத்தே, ஜூடோ, சிலம்பம், தடகளம் மற்றும் குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்ட வீரர்கள், மொத்தமாக 19 தங்கப் பதக்கங்களையும், 8 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினர்.இந்தப் போட்டியில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த த. வீர பிரகாஷ், நாகரத்தினம் அங்காளம்மாள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். அவர் 80 கிலோ எடைப்பிரிவு கராத்தே போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்று, இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.வீர பிரகாஷின் இந்த சர்வதேச வெற்றி, மதுரை மாவட்டத்திற்கும் வெற்றி ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.