நேபாளம் பெருவெள்ளம்: 4,858 பேரின் கதி என்ன? - மீட்பு பணி தீவிரம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

03 Sep 2026 www.thinathulir.com

நேபாளம் பெருவெள்ளம்: 4,858 பேரின் கதி என்ன? - மீட்பு பணி தீவிரம்

நேபாளம் பெருவெள்ளம்: 4,858 பேரின் கதி என்ன? - மீட்பு பணி தீவிரம்

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி போடேகோஷி நதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இமயமலையில் இருந்து அடித்து வரப்பட்ட பாறைகள், சேறு மற்றும்சகதிசுமார்8மாவட்டங்களைசூழ்ந்துள்ளன.ஆற்றின்கரையோரகிராமங்கள் மற்றும் நகரங்கள்பலவும்சேறும்சகதியுமாககாட்சியளிக்கின்றன. இந்த வரலாறு காணாத பேரிடரில் ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர். அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அடையாளம் காண முடியாத உடல்கள்நேபாளம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. நேற்று வரை 1,222 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சேறு மற்றும் இடிபாடுகளுக்கு இடையே தோண்டத்தோண்ட .மீட்கப்பட்ட உடல்களில் பெரும்பாலானவை உருக்குலைந்த நிலையில் இருப்பதால், அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மரபணு சோதனை மூலம் அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடையாளம் காணப்பட்ட உடல்கள் மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், உறவினர்கள் அடையாளம் காணும் வகையில் உடல்களின் புகைப்படங்கள் நேபாள போலீசாரின் இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன. 4,858 பேரின் நிலை என்ன?இதுவரை மீட்கப்பட்ட 1,222 உடல்களில் 95 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 6,500க்கும்அதிகமானோர்மீட்கப்பட்டுள்ளனர்.ஆனால்,வெள்ளத்தில்மாயமானவர்களில்4,858பேரின்நிலைஇதுவரைதெரியவில்லை.இதில்நேபாளத்தைச்சேர்ந்தவர்கள்மட்டுமின்றி,இந்தியாஉள்ளிட்டபல்வேறுநாடுகளைச்சேர்ந்தசுற்றுலாபயணிகளும்இடம்பெற்றுள்ளனர்.8ஆயிரம்பேர்தீவிரதேடுதல்மாயமானவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் என சுமார் 8,000 பேர் ஈடுபட்டுள்ளனர். தேடுதல் பணியுடன், சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுதல் உள்ளிட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதும், ஆயிரக்கணக்கான மாயமானவர்களின் நிலை குறித்து இன்னும் தகவல் கிடைக்காததும் நேபாளம் மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.