நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,280-ஐ கடந்தது; 5,620 பேர் மாயம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

04 Sep 2026 www.thinathulir.com

நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,280-ஐ கடந்தது; 5,620 பேர் மாயம்

நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,280-ஐ கடந்தது; 5,620 பேர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இமயமலைப் பகுதியில் கடந்த மாதம் 26-ந்தேதி பனிப்பாறை உடைந்ததைத் தொடர்ந்து போடேகோஷி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் தாக்கத்தால் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளத்துடன் அடித்துவரப்பட்ட சேறும் சகதியும் அப்பகுதியின் உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தின.இந்த பேரிடரில் நேபாளத்தைச் சேர்ந்தவர்களுடன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் காணாமல் போயுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களின் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி 1,280 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன**. பெரும்பாலான உடல்கள் சேதமடைந்த நிலையில் இருப்பதால், அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதுடன், பல உடல்கள் கூட்டாக அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.இதுவரை 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 5,620 பேரை இன்னும் காணவில்லை. அவர்களில் தமிழர்கள் உள்ளிட்ட ஏராளமானஇந்தியர்களும்இருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.பேரிடர் நிகழ்ந்து 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், காணாமல் போனவர்கள் உயிருடன் மீட்கப்படும் நம்பிக்கை குறைந்து வருகிறது. இதனால், அவர்களின் குடும்பத்தினர் அடையாள இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.ரசுவா மாவட்டத்தில் உள்ள பகரேபேசி கிராமத்தில் பல குடும்பங்கள், வெள்ளத்தில் காணாமல் போன தங்களது உறவினர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களை அடையாளப்படுத்தும் பொம்மைகளை வைத்து இறுதிச்சடங்குகளை நடத்தினர்.பல குடும்பங்களுக்கு தங்குமிட வசதியும், இறுதிச்சடங்குகளை நடத்துவதற்கான பூசாரிகளும் கிடைக்காத நிலை இருப்பதால் சடங்குகளை மேற்கொள்வதும் சிரமமாகியுள்ளது. இதனால் பகரேபேசி கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காத்மாண்டு உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு சென்றுள்ளனர். மேலும் சில குடும்பங்களும் அங்கிருந்து வெளியேற தயாராகி வருகின்றன.இதன் காரணமாக, தலைநகர் காத்மாண்டுவில் இறுதிச்சடங்குகளுக்காக பயன்படுத்தப்படும் பொது இடங்கள் நிரம்பி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கோவில்களில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.காணாமல் போன உறவினர்கள் மீண்டும் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதுடன், மீட்கப்படும் உடல்களை அடையாளம் காண்பதிலும் சிக்கல் நீடிப்பதால் அடையாள இறுதிச்சடங்குகளை நடத்துவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் பேரிடர் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து சோகமான சூழல் நிலவி வருகிறது.இதற்கிடையே, வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போடேகோஷி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது. இதனால் போடேகோஷி மட்டுமின்றி திரிசூலி உள்ளிட்ட ஆறுகளிலும் நீர்மட்டம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து பெய்து வரும் மழையால் மீட்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் புனித யாத்திரை, வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களுக்காக திபெத்தில் இருந்தனர். அவர்களில் 2,500-க்கும் மேற்பட்டோர் நேபாளத்துக்கு திரும்பியுள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணவில்லை என்று நேபாள வெளியுறவு செய்தித்தொடர்பாளர் லோக் பகதூர் சேத்ரி தெரிவித்துள்ளார்.