நெல்லை பயணிகள் கவனத்திற்கு.. அம்ரித் பாரத் ரெயில் வருகை நேரத்தில் மாற்றம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

23 Jul 2026 www.thinathulir.com

நெல்லை பயணிகள் கவனத்திற்கு.. அம்ரித் பாரத் ரெயில் வருகை நேரத்தில் மாற்றம்

நெல்லை பயணிகள் கவனத்திற்கு.. அம்ரித் பாரத் ரெயில் வருகை நேரத்தில் மாற்றம்

மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மற்றும் நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அம்ரித் பாரத் விரைவு ரெயிலின் நெல்லை ரெயில் நிலைய வருகை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ஜல்பைகுரியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் ரெயில் (வண்டி எண்: 20603) தற்போது பயணத்தின் மூன்றாவது நாள் இரவு 10.00 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தை வந்தடைந்து வருகிறது.வரும் செப்டம்பர் 23 முதல், இந்த ரெயில் நெல்லை ரெயில் நிலையத்தை 10 நிமிடங்கள் முன்னதாக, அதாவது இரவு 9.50 மணிக்கே வந்தடையும். அங்கு 5 நிமிடங்கள் நின்று, அதன் பின்னர் தனது பயணத்தை தொடரும்.இந்த நேர மாற்றத்தால், நாகர்கோவில் ரெயில் நிலையத்தை ரெயில் இரவு 11.05 மணிக்கு சென்றடையும் என்றும், இது தற்போதைய நேரத்தை விட 5 நிமிடங்கள் தாமதமாக இருக்கும் என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.