நெல்லை இரட்டைக் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த கடைசி குற்றவாளி கைது
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

21 Jul 2026 www.thinathulir.com

நெல்லை இரட்டைக் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த கடைசி குற்றவாளி கைது

நெல்லை இரட்டைக் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த கடைசி குற்றவாளி கைது

நெல்லை மாவட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கடைசி குற்றவாளியையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த சித்திரபுத்திரன் குடும்பத்துக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள்பாண்டியன் குடும்பத்துக்கும், தெருக்குழாயில் தண்ணீர் பிடித்த விவகாரத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக பகை நீடித்து வந்தது. இந்த விரோதம் காரணமாக இரு தரப்பிலும் இதற்கு முன்பு ஏழு கொலைச் சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.இந்த சூழலில், கடந்த 2-ஆம் தேதி சித்திரபுத்திரனின் மகன் காளிமுத்து (40), தனது மகன்கள் சின்னத்துரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வீரவநல்லூர் அருகேயுள்ள மாதுடையார்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் அவர்களை பின்தொடர்ந்தனர்.பின்னர், காளிமுத்து சென்ற மோட்டார் சைக்கிள் மீது காரை மோதச் செய்த கும்பல், அவரை அரிவாளால் தாக்கி தலை துண்டித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். கார் மோதியதில் 5 வயது ஜெயராஜ் உயிரிழந்தார். மேலும், சின்னத்துரையின் காலிலும் அரிவாளால் வெட்டிய பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் பெருமாள்பாண்டியன் தரப்பைச் சேர்ந்த மகேஷ் உள்ளிட்ட 11 பேரை முதற்கட்டமாக கைது செய்தனர். மேலும் தொடர்புடையவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.இந்த வழக்கில் 12-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கிருஷ்ணன் என்ற அஜித்தை போலீசார் பின்னர் கைது செய்தனர். வீரவநல்லூர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த அவரை பிடிக்க முயன்றபோது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் அஜித்தின் இடது காலில் காயம் ஏற்பட்டது. சம்பவத்தில் வெட்டுக்காயமடைந்த காவலர் பரமசிவமும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இதற்கிடையில், இந்த வழக்கில் இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்திருந்த நிலையில், தொடர்ந்து நடைபெற்ற விசாரணையையடுத்து மேலும் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த கடைசி குற்றவாளி கந்தசாமியையும் போலீசார் கைது செய்தனர்.இதன் மூலம் இந்த இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.