நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு: சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
10 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு: சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு: சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டசபையில் 110-வது விதியின் கீழ் பேசிய முதல்-அமைச்சர் விஜய், நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.அதன்படி, சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.289-ம், பொதுரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.150-ம் கூடுதலாக வழங்கப்படும். இதன் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சேர்த்து, சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,750-ம், பொதுரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600-ம் விவசாயிகளுக்கு கிடைக்கும்.இதேபோல், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.3,290.50 உடன், தமிழக அரசு சார்பில் டன் ஒன்றுக்கு ரூ.709.50 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.4,000 கிடைக்கும்.நெல்லுக்கான ஊக்கத்தொகை ரூ.150 வரை உயர்த்தப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.134-க்கு மேல் வழங்கப்படுவதும் இதுவே முதல் முறை என்றும் முதல்-அமைச்சர் விஜய் கூறினார்.விவசாயிகளை அரசு ஒருபோதும் கைவிடாது என்றும், அவர்களுக்கு தொடர்ந்து துணை நிற்கும் வகையில் அரசு செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.