நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய அரசு பேருந்து: ஓட்டுநர் உயிரிழப்பு; விபத்து குறித்து நடத்துநர் பரபரப்பு தகவல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
24 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய அரசு பேருந்து: ஓட்டுநர் உயிரிழப்பு; விபத்து குறித்து நடத்துநர் பரபரப்பு தகவல்

நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய அரசு பேருந்து: ஓட்டுநர் உயிரிழப்பு; விபத்து குறித்து நடத்துநர் பரபரப்பு தகவல்

நீலகிரி மாவட்டத்தில் மண் சரிவில் சிக்கிய அரசு பேருந்தின் ஓட்டுநர் ஜனகராஜ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்த விபத்தில் இருந்து மீட்கப்பட்ட பேருந்து நடத்துநர், விபத்து நடந்த விதம் குறித்து விளக்கியுள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீலகிரியின் மலைப்பாதைகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலைச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இந்த நிலையில், பர்லியார் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், மண் குவியலில் சிக்கிய பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரை மீட்டனர். பின்னர் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் ஜனகராஜ், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை: நடத்துநர் விளக்கம் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட அரசு பேருந்தின் நடத்துநர் பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், விபத்து நேர்ந்தபோது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை என்றும், ஓட்டுநரும் தானும் மட்டுமே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மலைப்பாதையில் சென்றபோது சாலையில் அடுத்தடுத்து மரங்கள் விழுந்ததாகவும், பேருந்தை பாதுகாப்பாக நிறுத்த முயன்ற சமயத்தில் மண் சரிவில் சிக்கிக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். போக்குவரத்தைச் சீரமைக்க தீவிர நடவடிக்கை மண் சரிவால் சாலையில் குவிந்துள்ள மண் மற்றும் பாறைகளை அகற்றி, போக்குவரத்தை மீண்டும் சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினரும் உள்ளூர் நிர்வாகத்தினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மலைப்பாதைகளில் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையே, தொடர் மழையால் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகளைச் சீரமைக்கும் பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.